மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 29,2022 | 00:00 IST
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அக்கடவள்ளி காலனி சேர்ந்த. துளசிதாசன், சிவா, கோபிநாத் ஆகியோர் திருத்துறையூர் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றனர். அதே பகுதியில் சேர்ந்த விமல், ராஜ், விஜய் சந்திரன் உள்ளிட்டோர் அங்கு செட்டிபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளிக்கிழமை அக்கட வல்லி பஸ் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த ஊரை சேர்ந்த டாட்டா ஏசி வாகனம் அவ்வழியாக வேகமாக வந்தது. அப்போது ரோட்டில் தேங்கி இருந்த மழை நீர் மாணவர்கள் மீது அடித்துள்ளது. மாணவர்கள் மெதுவாக செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஓட்டுநர் நாங்கள் அப்படித்தான் செல்வோம் கூறினார். அப்போது இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை பஸ்சில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தபோது அக்கடவள்ளி ஊரைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த மாணவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து