பொது ஆகஸ்ட் 29,2022 | 13:30 IST
Kumbakonamமடத்து தெருவில் பகவத் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் ஏழாம் நாள் நிகழ்வு நேற்றிரவு நடந்தது. 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால் குபேர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்திய ரூபாய் நோட்டுகளுடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாட்டு ரூபாய் நோட்டுகளும் அலங்காரத்தில் இடம் பெற்றிருந்தன. மூலவர் பகவத் விநாயகர் தங்க கவசம் அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசனத்தில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து