பொது ஆகஸ்ட் 29,2022 | 15:19 IST
தேனி மாவட்டம் கம்பத்தில் மலர் விவசாயம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 15 நாட்களாக தொடர் மழை பெய்வதால் பூக்கள் செடியிலேயே நனைந்து அழுகியது. அதே நேரம் அறுவடை செய்த பூக்களுக்கும் நல்ல விலை கிடைக்கவில்லை. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கும் அனுப்ப முடியவில்லை. நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் செண்டு மற்றும் செவ்வந்திப் பூக்களை சாலையோரங்களில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து