சிறப்பு தொகுப்புகள் ஆகஸ்ட் 29,2022 | 00:00 IST
கோவை சவுரிபாளையம் அடுத்து பாலசுப்பிரமணியம் நகர் உள்ளது. அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் நிலம் குப்பைகூடமாக இருந்தது. சுத்தம் செய்தாலும் பராமரிப்பு இல்லை. குப்பைகூடத்தை பூங்காவாக மாற்ற அப்பகுதிவாசிகள் முடிவு செய்தனர். மாநகராட்சி அதிகாரிகளும் அனுமதி கொடுத்தனர். ரூபாய் 50 லட்சம் திரட்டி, ஆக்சிஜன் பூங்கா அமைத்தனர். சனி, ஞாயிறுகளில் 2 மணி நேரம் இலவச யோகா பயிற்சியும் கொடுக்கப்படுகிறது .பூங்கா அமைத்தவர்கள் செடி வளர்ப்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மரம், செடிகளை பார்க்கும் போதே மனசுக்கு நிம்மதியா இருக்கும். வாக்கிங் போவது மட்டுமல்லாமல் , அங்கேயே புத்தகம் , செய்திதாள் படிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர் பரமாரிப்பு இல்லாமல் கிடக்கும் மாநகராட்சி இடங்களை , மக்களுக்கு பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
வாசகர் கருத்து