பொது ஆகஸ்ட் 29,2022 | 23:00 IST
பாகிஸ்தானில் 30 ஆண்டு இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 110 மாவட்டங்களில் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இன்றி தவிக்கின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உளள்னர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை அறிந்து வருத்தமடைந்தேன். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன் என மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து