மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 31,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் செயல்படுகிறது சோலாடி சோதனை சாவடி. தமிழக கேரளா எல்லையான இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பா். இந்நிலையில் இன்று காலை, கேரளா மாநில பகுதியிலிருந்து வந்த 4 யானைகள் ஆற்றில் இறங்கியது. மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளபோதும், ஆற்றில் ஹாயாக நான்கு யானைகளும் நீந்தி கரை சேர்ந்தது. இதனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வழியாக வந்த பயணிகள் ரசித்து சென்றனர்.
வாசகர் கருத்து