மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 31,2022 | 00:00 IST
விருத்தாசலம், கம்மாபுரம் பகுதியில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கம்மாபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதிய வடிகால் வசதி இல்லாமல், விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், நெற்கதிர்கள் முளைக்க துவங்கி விட்டன. இதனால், மகசூல் பாதிக்குமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து