மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 31,2022 | 00:00 IST
திண்டுக்கல் அடுத்த குடைபாறைபட்டியில் கட்சி, அமைப்புகள் சார்பாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட போலீஸ் தடை விதித்துள்ளது. தடையை மீறி இந்து முன்னணியினர் குடைபாறைபட்டி ஊரின் நடுவே உள்ள காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து சென்று கருப்பண்ணசாமி கோயில் மைதானத்தில் வைத்து வழிபட்டனர். அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து 25 பேரை கைது செய்தனர். விநாயகர் சிலையை கைப்பற்றிய போலீசார் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.
வாசகர் கருத்து