மாவட்ட செய்திகள் செப்டம்பர் 01,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திராவிட நட்புக் கழகத்தின் அறிமுகக்கூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், அதிமுகவை அழித்து விட்டு பாஜ வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்குத் தெரியும் திமுகவின் மீது கைவைக்க முடியாது என்று. தமிழகத்தில் 2வது இடத்தில் மட்டுமல்ல 7வது இடத்துக்கூட வர முடியாது. தாமரைக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை வராது. ஆனால் அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார்.
வாசகர் கருத்து