மாவட்ட செய்திகள் செப்டம்பர் 01,2022 | 00:00 IST
கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது. திருச்சி சமயபுரம், நாமக்கல், தர்மபுரி,விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் 180 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து