மாவட்ட செய்திகள் செப்டம்பர் 01,2022 | 00:00 IST
தருமபுரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பென்னாகரம் பகுதிக்குட்பட்ட ஒகேனக்கல், நாகமரை, குருக்கலையனூர், ஏர்கோல்பட்டி அரூர் பகுதிக்குட்பட்ட பெரிய ஏரி ஆகிய 5 இடங்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், ஆறுகளில் அடித்துச் செல்லப்படும் நபர்களை காப்பாற்றுவது, ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தத்தளிக்கும் நபர்களுக்கு உதவி செய்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன அரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் கனிமொழி, தீயணைப்பு நிலைய அலுவலர் ரகுபதி,பேரிடர் மீட்பு குழுவினர், டாக்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து