அரசியல் செப்டம்பர் 01,2022 | 00:00 IST
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ல், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடக் கூடாது; பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் மாநில அரசின் முதன்மைப் பணி. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து