மாவட்ட செய்திகள் செப்டம்பர் 02,2022 | 00:00 IST
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் இன்று சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் அரசு சலுகைகள் பெறாதவர்கள் யாரும் இல்லை. அப்படி இருக்கும் போது குடும்ப தலைவிக்கு ரூ.1000த்தை யாருக்கு வழங்குவார். இது ஏமாற்றும் திட்டம் தான். புதுச்சேரி பாஜக எம்எல்ஏ சட்டசபையில் பேசும் போது, மதுபானம் தயாரிக்கும் உரிமத்திற்கு பல கோடி லஞ்சம் பெற்றதாக கூறியுள்ளார். மதுபானம் உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்ஏ பகிரங்கமாக கூறும் போது ஏன் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவில்லை என கேள்வி எழுப்பினார்.
வாசகர் கருத்து