மாவட்ட செய்திகள் செப்டம்பர் 03,2022 | 00:00 IST
திருச்சி ஏர்போர்ட்டில் அதிக அளவில் தங்கம் கடுத்துவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானங்களில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். 57 பயணிகளிடம் தனியறையில் சோதனை நடந்தது. ஒரு நபரிடம் 200 முதல் 500 கிராம் என 10 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக 2 பயணிகள் ஒரு கிலோ தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
வாசகர் கருத்து