மாவட்ட செய்திகள் செப்டம்பர் 04,2022 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 படிக்கும் 650 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் கடந்த ஆகஸ்ட் 8 ம் தேதி பள்ளிக் கல்வித்துறை வழங்கியது. அவற்றை பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைத்தனர். சைக்கிள்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து வீணாகி வருகிறது. மாணவிகளுக்கு சைக்கிள்களை உடனே வழங்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து