Advertisement

படிப்பில் போட்டி மாணவனுக்கு விஷம் கொடுத்த சக மாணவியின் தாய் கைது

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 04,2022 | 00:00 IST

Share

காரைக்கால், நேரு நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன்-மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன். தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். உடன் படிகும் மாணவி அருள்மேரியுடன் படிப்பில் ஏற்பட்ட போட்டியால் மாணவியின் தாய் சகாயராணி, பூச்சி மருந்து கலந்த கூலட்ரிங்க்ஸ் கொடுத்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், நேற்றிரவு இறந்தான். உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முகமது மன்சூர்  உறுதி அளித்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். பள்ளி வட்ச்மேன் மூலம் பூச்சி மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் கொடுத்த மாணவியின் தாய் சகாயராணியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X