மாவட்ட செய்திகள் செப்டம்பர் 04,2022 | 15:38 IST
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட மலர் சாகுபடி செய்கின்றனர். இதனால் பூக்களின் வரத்து அதிகரித்தது, கடந்த சில நாட்களாக தக்க விலை இல்லாமல் விவசாயிகள் கவலையடைந்தனர். விநாயகர் சதூர்த்தி முதல் ஆவணி மாதத்தில் தொடர்ந்து முகூர்த்த தினங்கள் வருவதால் கணிசமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குண்டு மல்லி கிலோவுக்கு 800 ரூபாய், கனகாம்பரம் 700 ரூபாய், சன்ன மல்லி 700 ரூபாய், அரளி 300 ரூபாய், ஜாதி மல்லி 250 ரூபாய், சம்பங்கி 200 ரூபாய், காக்கட்டான் 360 ரூபாய் என பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
வாசகர் கருத்து