அரசியல் செப்டம்பர் 04,2022 | 19:35 IST
தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி புதிய பள்ளிக்கல்விக் கொள்கையை மத்தியபிரதேச அரசு வெளியிட்டது. 1.7 கிலோவில் தொடங்கி 4.5 கிலோ வரை வகுப்புக்கு ஏற்றாற்போல் புத்தகப் பையின் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக அனுசரிக்கப்படும். கணினி, பொது அறிவு, விளையாட்டு, உடற்பயிற்சி, கலைகள் குறித்து அந்நாளில் மாணவர்களுக்கு கற்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் மத்தியப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது; மாநிலத்தில் உள்ள 1.30 லட்சம் பள்ளிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்; இதை கடைப்பிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை கூறியுள்ளது.
வாசகர் கருத்து