மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் கலாச்சார விழா நடந்தது. ஐதராபாத் மருத்துவக்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு நிகழ்ச்சிகள் முடிந்த பின், அறைக்கு திரும்பி கொண்டிருந்த ஐதராபாத் மாணவியிடம் பைக்கில் வந்த 2 பேர் அத்துமீறினர். தப்பித்து அறைக்கு வந்த மாணவி, தோழிகளிடம் நடந்ததை கூறியுள்ளார். கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஜிப்மர் வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். சில்மிஷத்தில் ஈடுபட்டது கான்ஸ்டபிள் கண்ணன், உடன் வந்த அவரது உறவினர் சிவா என தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து