மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் சித்தேரி , பெரியஏரி ஆகிய இரண்டு ஏரிகளில் இன்று அதிகாலை மீன்பிடித் திருவிழா நடந்தது. முதல் சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்களை பிடித்தனர். இதில் கட்லா , கெண்டை , ரோகு , ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மக்கள் பிடித்து அள்ளிச் சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சிறியவர்கள், பெரியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.
வாசகர் கருத்து