மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் விழா தொடங்கியது. யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹூதி இன்று முடிந்து யாகசாலையில் இருந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீர ஆஞ்சநேயர் ராஜகோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து