மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி பகுதியில், மது பாட்டில்கள் பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, கடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெள்ளகண்ணு மகன் ஏழுமலை (45) என்பவர் வீட்டில் சோதனை செய்த போது, அங்கு 35 அட்டைப்பெட்டிகளில் 1680 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், ஏழுமலை மற்றும் சமட்டிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜா (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மதுபாட்டில்கள், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு,
வாசகர் கருத்து