பொது செப்டம்பர் 05,2022 | 15:15 IST
தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் உள்ள நடராஜர் சிலையை 62 ஆண்டுகளுக்கு முன்பே, மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். கோயிலில் உள்ளது போலியானது என்பதும், சிலை வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதும் தெரிந்தது. புதுச்சேரியின் இந்தோ- பிரெஞ்சு நிறுவனத்திடம், அசல் புகைப்படங்களை பெற்று உலகளாவிய தேடலை விசாரணை குழு துவங்கியது. நியூயார்க்கில் உள்ள ASIA SOCIETY MUSEUMல் அசல் சிலை போல் இருந்ததை கண்டுபிடித்தனர். இரு சிலைகளின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்த்து நடராஜர் சிலை தான் என்பது நிரூபணம் ஆனது. சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுறது.
வாசகர் கருத்து