மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கல்லாறு - ஹில்குரோவ் இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்தன. பாதை சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மண்சரிவால் மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வாசகர் கருத்து