மாவட்ட செய்திகள் செப்டம்பர் 06,2022 | 23:21 IST
கடலுார் மாவட்டம், பெரிய நெசலுாரை சேர்ந்தவர் செல்வி ராமலிங்கம், 40. இவர் நேற்று, டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கணியாமூர் தனியார் பள்ளியில் என் மகள் ஸ்ரீமதி பிளஸ் 2 படித்தார். ஜூலை 12ல் மர்மமான முறையில் பள்ளியில் இறந்து கிடந்தார். அவளது மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், என் மகளின் மரணம் குறித்தும், என் குடும்பம் குறித்தும், சமூக வலைதளங்களில் சிலர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கார்த்திக் பிள்ளை என்பவர், என் திருமணம் பற்றியும் அவதுாறாக கருத்து தெரிவித்து ஒரு 'வீடியோ' வெளியிட்டுள்ளார். இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்
வாசகர் கருத்து