மாவட்ட செய்திகள் செப்டம்பர் 06,2022 | 14:50 IST
சென்னை, திருவெற்றியூர், மேற்கு மாட வீதியில் கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி வந்தது. திடீரென சாலையில் லாரியின் பின்பக்க டயர் சாலையில் புதைந்தது. லாரி டிரைவர முயன்றும், மேலே கொண்டு வர முடியவில்லை. ஜேசிபி உதவியுடன் லாரியை பின்பக்கமாக தூக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். லாரி டயர் புதைந்த இடத்தில் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளம் முழுக்க நீர் நிரம்பியுள்ளது. தரமற்ற சாலையால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுகிறது. அரசு தலையிட்டு காண்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து