சம்பவம் செப்டம்பர் 06,2022 | 00:00 IST
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால், ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 44 அடியில், 41 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பிவிட்டது. வினாடிக்கு 5220 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால், தட்டிகானப்பள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றையொட்டிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து