மாவட்ட செய்திகள் செப்டம்பர் 07,2022 | 00:00 IST
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளது ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் கோயில். இக்கோயிலில் ஒரே கல்லிலான 9 அடி உயரத்தில் திருவாச்சியுடன் கூடிய கருங்கல் திருமேனி வடித்து புதிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வலம்புரி செல்வ விநாயகர், பாலமுருகன், அண்ணாமலையார், ஐயப்பன், ஆஞ்சநேயர், காலபைரவர், நவக்கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 2 நாட்களாக நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹூதி, யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜை நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் விமான கோபுரங்களுக்கும், மூலவருக்கும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
வாசகர் கருத்து