Advertisement

அடடே... ரஜினி விரும்பிய பொன்னியின் செல்வன் கூட்டணி

சினிமா வீடியோ செப்டம்பர் 07,2022 | 14:07 IST

Share

பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்று டிரைலரை் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். பின்னர் பேசிய அவர், ‛‛மணிரத்னம் அசுர திறமைசாலியான மனிதர். மும்பையில் இருக்கும் பெரிய ஸ்டார்ஸ் எல்லாம் மணிரத்னத்தை பார்த்தால் எழுந்து நிற்பார்கள். அந்தகாலத்தில் பார்ட் 1,2 என்றெல்லாம் படம் எடுக்க முடியாது. அதனால் தான் பொன்னியின் செல்வன் அப்போது படமாக எடுக்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கேரக்டர் தான் நான் நடித்த படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டருக்கான இன்ஸ்பரேசன். அந்தக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் கேரக்டர் யார் பண்ணினால் நன்றாக இருக்கும் என ஒரு பேட்டியில் கேட்டார்கள். அதற்கு அவர் ரஜினிகாந்த் என்று கூறினார். அவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நான் நடிக்கவா என்று மணிரத்னத்திடம் கேட்டேன். அவர் ஒத்துக்கவில்லை. எனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என கூறிவிட்டார். பழு வேட்டையராக நான், பொன்னியின் செல்வனாக கமல், ஆதித்யா கரிகாலனாக விஜயகாந்த், குந்தவையாக ஶ்ரீதேவி, நந்தினியாக இந்தி ரேகா, பெரிய பழுவேட்டையர் சத்யராஜ் என்று இந்த மாதிரி கதாபாத்திரங்கள் அப்போது நான் பிளான் பண்ணும் போது எனக்கு தோன்றியது'' என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X