மாவட்ட செய்திகள் செப்டம்பர் 07,2022 | 00:00 IST
நாகை அடுத்துள்ள பாப்பாகோவில் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரெங்கநாயகி சமேத கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா கடந்த 4 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை 5-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று வைஷ்ணவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து