மாவட்ட செய்திகள் செப்டம்பர் 07,2022 | 15:50 IST
மயிலாடுதுறை மாவட்டம், சேத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இதில் சேத்தூர், மேலாநல்லூர், உடையூர், பருத்திக்குடி, மன்னிப்பள்ளம், பொன்வாசநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் திறக்க பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணமேடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
வாசகர் கருத்து