மாவட்ட செய்திகள் செப்டம்பர் 07,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தையல் பயிற்சி நிலையத்தில் நடந்தது. தையல் பயிற்சி மைய ஆசிரியர் சுலோச்சனா தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் ஜோதிமணி, சோனியாகாந்தி, பிரசிதா ஆகியோர் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் அவசியம் மற்றும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினர். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி நிலைய பெண்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து