அரசியல் செப்டம்பர் 08,2022 | 09:57 IST
அதிமுக இடைக்கால பொது செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைத்தல், 2023 ஜனவரி 1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நவம்பர் 9ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. அன்று முதல், டிசம்பர் 8 வரை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும். இதில் கட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய உதவ வேண்டும். வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணிகளில், ஆளும் கட்சியினர் அத்துமீறல் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து, உரிய தீர்வு காண வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து