மாவட்ட செய்திகள் செப்டம்பர் 08,2022 | 00:00 IST
புதுச்சேரி சின்ன மாநிலமாக இருந்தாலும் தற்கொலையில் அகில இந்திய அளவில் 31.8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள், 370 பெண்கள், 133 மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 504 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தத் தற்கொலைகளில் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. வேளாண்மைக்காக உரம் பூச்சி மருந்து கடைகளில் மட்டுமே எலி மருந்தை விற்கவேண்டும். ஆனால், பெட்டி கடைகளில் கூட எலி பேஸ்ட் விற்கப்படுகிறது. இது தற்கொலை மனநிலையில் இருப்பவர்களின் கைக்கு மிக சுலபமாக கிடைக்கிறது. உயிர் கொள்ளியான எலிப்பேட்டை சாப்பிடுவதால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்க சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.
வாசகர் கருத்து