மாவட்ட செய்திகள் செப்டம்பர் 08,2022 | 00:00 IST
புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் , செல்வ விநாயகர், ஆவுடையார், தில்லை காளியம்மன், செங்கழுநீர் மாரியம்மன், பொற்கலை பூரணி, ஐயப்பன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா 5ம் தேதி துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று திரவுபதி அம்மன் ராஜகோபுரத்திற்கும் தொடர்ந்து மற்ற 7 கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து