மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அருகம்புல், தாமரை, வில்வ இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர் -- வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடந்தது. நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் உலா வந்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து