மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த கோவிலில் பெருமாளை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் புனித நீரை ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு, பெருமாளை சேவித்தனர்.
வாசகர் கருத்து