மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
தமிழக கல்வித்துறை பள்ளி மாணவ, மாணவியர்களை பள்ளியை சுத்தம் செய்யும் பணியிலோ வேறு இதர பணியிலோ ஈடுபடுத்த கூடாது என சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில் சிவகங்கை நேருபஜார் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் ஆர்.சி நடு நிலைப்பள்ளியில் பள்ளியின் வாயிலில் உள்ள கழிவு நீர் வாய்காலை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினர். மாணவிகளை குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை தடுக்க பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து