அரசியல் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாட்டின் ஒற்றுமைக்காக பயணம் செல்வது முரண்பாடாக இல்லையா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "கட்சியின் தேர்தல் வரும்போது, நான் தலைவர் ஆவேனா இல்லையா என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டும் என்பதை மனதுக்குள் முடிவு செய்துவிட்டேன். அதில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் வரை பொறுத்திருங்கள்" என ராகுல் பதில் அளித்தார். ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியின் முடிவு. கட்சி கொள்கைகளை மக்களிடம் சேர்க்கவும், தனிப்பட்ட வகையில் என்னை வலுப்படுத்தவும் இப்பயணம் உதவும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
வாசகர் கருத்து