மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
கொங்கு சமூக ஆன்மீக கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவில் டி-20 கிரிக்கெட் போட்டிகள் சின்னவேடம்பட்டி டி.கே.எஸ். பள்ளி மற்றும் பீளமேடு பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானங்களில் நடந்தது. லீக் போட்டியில் டி.சி.வி.எம்.ஏ. அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய காஸ்மோ அண்ட் கிர்டா அரினா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் வித்தியாசத்தில் டி.சி.வி.எம்.ஏ. அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக காஸ்மோ கிர்டா அரினா அணி மற்றும் புரோபசனல் சி.ஏ. அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த காஸ்மோ கிர்டா அரினா அணி 17 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய புரபசனல் அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.சி.ஏ. அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. எதிர்த்து விளையாடிய செல்வா கிரிக்கெட் அகாடமி அணி 18.5 ஓவர்களில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. எஸ்.கே.சி.ஏ. அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து