மாவட்ட செய்திகள் செப்டம்பர் 10,2022 | 00:00 IST
புதுச்சேரி அரசு மற்றும் நவ தர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியவைகள் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து சங்கரதாஸ் சாமிகள் பெயரில் விருதுகள் வழங்குகிறது. இந்த ஆண்டிற்கான திரைப்பட விழா புதுச்சேரியில் அலைன் பிரான்சிஸ் கலையரங்கில் நேற்று தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் லட்சுமி நாராயணன்.. புதுச்சேரி அரசால் தேர்வு செய்யப்பட்ட கூழாங்கல் படத்திற்கு விருதான ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை இயக்குனர் வினோத் ராஜியிடம் வழங்கி கௌரவித்தார். பின்னர் இயக்குனர் வினோத் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து