மாவட்ட செய்திகள் செப்டம்பர் 10,2022 | 00:00 IST
ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலம் விஏஓ சதீஷ்குமாரிடம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் பட்டா மாற்றம் செய்ய வந்தார். விஏஓ சதீஷ்குமார், ரூ. 4 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் செல்வராஜ் புகார் செய்தார். ரசாயனம் தடவிய பணத்தை போலீசார் கொடுத்தனர். செல்வராஜ் அதை சதீஷ்குமாரிடம் கொடுத்தார். மறைந்திருந்த போலீசார் விஏஓ சதீஷ்குமார் மற்றும் இடைத்தரகர் பாலனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து