மாவட்ட செய்திகள் செப்டம்பர் 10,2022 | 00:00 IST
உலக மின் வாகன தினத்தை முன்னிட்டு இ - பைக் விழிப்புணர்வு ஊர்வலம் கோவை ரேஸ்கோர்ஸ் இன்கம்டாக்ஸ் அபீஸ் அருகே நடந்தது. கலெக்டர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்படும் என்பதை பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக கோவை எஸ்.எஸ்.இ.எம். சார்பில் இ - பைக் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓசோ டெக். ஈக்கோ டைனமிக், இ ராய்ஸ், இ மோட் எலக்ட்ரிக், ரூட்ஸ், புரோபெல் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் இ - பைக்கில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் ரேஸ்கோர்ஸ் பகுதியை மூன்று முறை சுற்றி வந்து நிறைவடைந்தது.
வாசகர் கருத்து