மாவட்ட செய்திகள் செப்டம்பர் 10,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாட்டில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நடத்திய சோதனையில் பாலமுருகன் என்ற இளைஞர், 43 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய். குட்காவை பறிமுதல் செய்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து