மாவட்ட செய்திகள் செப்டம்பர் 12,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இரண்டு தினங்களாக யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின் கோபுரங்களுக்கும், உற்சவருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டன. திரளான பக்தர்கள் செல்வ விநாயகரை தரிசித்தனர்.
வாசகர் கருத்து