மாவட்ட செய்திகள் செப்டம்பர் 12,2022 | 00:00 IST
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இந்தியன் வங்கி வாடிக்கையாளர். ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம்-மில் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றார் மெஷினில் இருந்து பணம் வரவில்லை. கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது. அவர் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று மேனேஜரிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்கவில்லை. பல முறை கேட்டும் எவ்வித விளக்கமும் அளிக்காமல் அலைக்கழித்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான ராதாகிருஷ்னன் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உடனடியாக அவரிடமிருந்த மண்ணெண்ணை கேனை பிடுங்கினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டெஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து