மாவட்ட செய்திகள் செப்டம்பர் 12,2022 | 00:00 IST
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் பெரியநாயகி சமேத மருந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று காலை நான்காம் காலபூஜைகள் முடிந்தது. பின்னர் விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். -- காரைக்கால் அடுத்த தென்னங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீவரதராஜ பெருமாள்,ஸ்ரீசவுரிராஜ பெருமாள் கோயிலில் மஹா சம்ப்ரோக்ஷண விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து