பொது செப்டம்பர் 12,2022 | 19:15 IST
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிகுமாரின் நண்பர் வெள்ளைச்சாமியை நாய் கடித்தது. நண்பரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பழனிகுமார் அழைத்து சென்றார். சிகிச்சை அளித்து ஊசி போட்ட டாக்டர், தொடர்ந்து மேலும் 2 நாட்கள் ஊசி போட அறிவுறுத்தினார். 2வது நாள் சென்றபோது நாய்க்கடிக்கான ஊசி ஸ்டாக் இல்லை என கூறினார். பழனிகுமார் மருத்துவ கல்லூரி டீன் முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். மருந்து வாங்க இன்னும் பணம் ஒதுக்கீடு செய்யாததால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாய்கடி மருந்து தட்டுபாடு உள்ளதாக கூறியுள்ளார். டீன் பேசியது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து