பொது செப்டம்பர் 12,2022 | 22:23 IST
கோவை, சுந்தராபுரம் அருகே குறிச்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிவன் கோயில் உள்ளது. நர்சரி பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில் ராஜதுரை என்பவர் வழக்கு தொடர்ந்தார். கோயிலை இடிக்க வீட்டு வசதி வாரியத்துக்கு ஐகோர்ட் 2017 ல் உத்தரவிட்டது. செப்டம்பர் 13ம்தேதி அதிகாரிகள் முன்னிலையில் கோயில் இடிக்கப்படும் என கோயில் நிர்வாகத்துக்கு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியது. இதனால் அப்பகுதி மக்கள், திமுக கவுன்சிலர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் தலைமையில் கோயிலுக்கு சென்று, பக்தி பாடல்களை பாட ஆரம்பித்தனர். இதையறிந்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கோயிலுக்கு சென்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் என்றனர். பக்தர்கள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து பக்திப்பாடல்களை பாடி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, கலெக்டர் சமீரனை சந்தித்து நிலவரத்தை தெரிவிக்க அதிகாரிகள் புறப்பட்டனர்.
வாசகர் கருத்து