பொது செப்டம்பர் 12,2022 | 22:31 IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் சுத்தம் செய்தல், சமையல் வேலை, துணிகளை துவைத்தல் போன்ற பணிகளை 550க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் செய்கின்றனர். இவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள அடிப்படை சம்பளமான 18 ஆயிரம் ரூபாய், மற்றும் அகவிலைப்படி 6 ஆயிரம் ரூபாய் என 24 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன் 500க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் இரவு வரை போராட்டம் தொடர்ந்தது. தூய்மை, சமையல் பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகளும், உறவினர்களும் அவதிக்குள்ளாயினர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தொழிலாளர்கள் கூறினர்.
வாசகர் கருத்து